Montag, 13. Februar 2012

மனிதனின் நினைவாற்றல்! by vayal உங்களது நினைவாற்றலைக் கூர்மையாகவும், தீவிர மாகவும் வைத்திருங்கள். வெறுமனே திருப்பித் திருப்பி ஒன்றைப் படிப்பதை விட அந்த வாசகத்தை நாமே புரிந்து, பின்னர் அதை நமது சொந்த வார்த்தைகளில் வெளியிடுவது பயன் தரும். எதையேனும் ஒன்றைப் படித்தபிறகு மனதில் அதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களால் அதை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்றால் உடனே புத்தகத்தைத் திருப்பாதீர்கள். நினைவுக்குக் கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். சற்றுக் கஷ்டப்பட்டும் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்றால் புத்தகத்தைத் திருப்பிப் பார்ப்பது நல்லது. நினைவாற்றலைப் பயிற்சியின் மூலம் வளப்படுத்த முடியும். பாடல்களை மனனம் செய்வது மிகச் சிறந்த பயிற்சி. நினைவாற்றல் 20- 25 வயது வரை வளர்ச்சியடைகிறது. 40- 45 வயது வரை அது நிலையாக நíடிக்கிறது. அதற்குப் பின் பலவீனமடைகிறது. பிம்ப அடிப்படையிலான நினைவில் 75 சதவீதம் நமது 25 வயதுக்கு முன்னரே பெறப்பட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனினும் தர்க்க ரீதியான நினைவாற்றலுக்கு வயது வரம்பு ஏதும் கிடையாது

Keine Kommentare:

Kommentar veröffentlichen